தமிழ்நாடு

”இது இல்லை; வேற டிசைன் காட்டுங்க” : கண்ணிமைக்கும் நேரத்தில் 8.5 சவரன் நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்கள்!

நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்றதாக திருப்பூர் திருமுருகன்பூண்டி போலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இது இல்லை; வேற டிசைன் காட்டுங்க” : கண்ணிமைக்கும் நேரத்தில் 8.5 சவரன் நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னத்தம்பி (52). இவர் திருப்பூர் - அம்மாபாளையத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

அந்த நகை கடைக்கு தங்க நாணயங்கள் வாங்குவது போல் இரண்டு வாலிபர்கள் முகக்கவசம் அணிந்து கடைக்குள் புகுந்துள்ளனர். அப்போது கடையில் இருந்த சின்னத்தம்பி அந்த வாலிபர்களிடம் தங்க நாணயங்களை காட்டியுள்ளார். பின்னர் வேறு டிசைன் உள்ள தங்க நாணயங்களை காட்டுமாறு வாலிபர்கள் கூறியுள்ளனர்.

”இது இல்லை; வேற டிசைன் காட்டுங்க” : கண்ணிமைக்கும் நேரத்தில் 8.5 சவரன் நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்கள்!

சின்னத்தம்பி தங்க நாணயங்களை எடுக்க திரும்பும்பொழுது, நகைக்கடையில் இருந்த தங்க நாணயம் பாக்கெட்டை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் சின்னத்தம்பி திருப்பூர் திருமுருகன்பூண்டி போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் திருமுருகன்பூண்டி கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் 8.5 சவரன் மதிப்பிலான நகைகள் திருடு போனது தெரிய வந்தது. பட்டப்பகலில் நகைக் கடையில் நகை வாங்குவது போல நடித்து 8.5 சவரன் தங்க நாணயங்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories