தமிழ்நாடு

உதகையில் ... மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படுகர் இன மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார்.

உதகையில் ... மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய  நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

124வது உதகை மலர் கண்காட்சி - உதகை 200 துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றார். பிறகு அங்கு இன்று காலை தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

பின்னர், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கிப் பேசினார்.

இதையடுத்து குன்னூரிலிருந்து உதகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு மலைவாழ் மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். இதைப்பார்த்து மலைவாழ் மக்கள் உற்சாகமடைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories