தமிழ்நாடு

“இனி வரும் காலத்தில் அ.தி.மு.கவிற்கு களமே இல்லாமல் போகும்..” : அடித்துச் சொல்லும் கே.பாலகிருஷ்ணன்!

அ.தி.மு.க சொந்த கொள்கை இல்லை, பா.ஜ.க சொல்வதைத்தான் செய்கின்றனர். வரும் காலத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க-விற்கு களம் கிடையாது என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“இனி வரும் காலத்தில் அ.தி.மு.கவிற்கு களமே இல்லாமல் போகும்..” : அடித்துச் சொல்லும் கே.பாலகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், நூல் விலை உயர்வால் ஆலை முதலாளிகளே இன்று போராட்டம் செய்து வருகின்றனர். 25 லட்சம் பேர் தொடர்புடைய தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்து முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாது, இந்தியாவில் அலுமினியம், காப்பர் பொருள்கள் விலை உயர்ந்துள்ளதால் சிறு-குறு தொழில் அழிவை நோக்கி செல்கின்றன எனத் தெரிவித்தார்.

மேலும், ஓராண்டு தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சவால்களை சந்தித்து, கொரோனா போன்ற கடுமையான நெருக்கடிகளை சந்தித்து பல வாக்குறுத்திக்களை நிறைவேற்றி உள்ளனர் பராட்டுகிறேன், வரவேற்கிறேன் என்றார்

காவல்துறை செய்த அத்துமீறல்களில் ஒரு முறைகூட அதிமுக அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. ஆனால் தி.மு.க அரசு யார் குற்றவாளியாக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும் கைது செய்து இருக்கிறது. அ.தி.மு.க சொந்த கொள்கை இல்லை, பா.ஜ.க சொல்வதைத்தான் செய்கின்றனர். வரும் காலத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க-விற்கு களம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories