தமிழ்நாடு

“தந்தை இறந்து 2 மாதங்களில் மகன் கைது - விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை” - துப்பு துலக்கிய போலிஸ் !

தந்தை மரணத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு போலிஸார் மகனின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

“தந்தை இறந்து 2 மாதங்களில்  மகன் கைது - விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை” - துப்பு துலக்கிய போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மாதவரம் அருகே மாத்தூர் எம்.எம்.டி.ஏ இரண்டாவது பிரதான தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (78). பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய முதல் மகன் சிவகுமார் (42), இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவரது இரண்டாவது மகன் நரேந்திர குமார் (45), சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மூன்றாவது மகன் செந்தில்குமார்(38). இவர் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான்காவது மகன் செல்வகுமார் (35). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாருக்கு அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. இதையடுத்து மனைவி மகன், மகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு சிவகுமாருக்கு வங்கியில் வேலை இழப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மனைவி மற்றும் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு சிவக்குமார் மட்டும் சென்னைக்கு வந்துவிட்டார். பின்னர் தந்தை பாலசுப்பிரமணியம் தம்பி செல்வ குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.

“தந்தை இறந்து 2 மாதங்களில்  மகன் கைது - விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை” - துப்பு துலக்கிய போலிஸ் !

இந்தநிலையில், செல்வகுமாருக்கு திருமணம் செய்ய வரன் பார்த்தனர். ஆனால் பெண் சரியாக பெண் அமையவில்லை. மூத்த மகன் சிவகுமார் வீட்டிலேயே இருப்பதால் தான் பெண் கொடுக்க தயங்குகிறார்கள் என்று யோசித்த அவர் தந்தையை பாலசுப்ரமணியம் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதியன்று தந்தை பாலசுப்ரமணியம், சிவகுமாரை பார்த்து ‘நீ வீட்டில் இருப்பதால்தான் உன் தம்பிக்கு வரன் அமையவில்லை’ அதனால் நீ அமெரிக்காவுக்கு சென்று விடு’ என்று கூறியுள்ளார்.

இதனால் தந்தை மகன் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் சிவகுமார் அவரது தந்தை பாலசுப்பிரமணியத்தை அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை சிவகுமார் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். இதையடுத்து மாதவரம் பால்பண்ணை போலிஸார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பாலசுப்ரமணியனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடம்பில் அடித்ததற்காக காயம் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மாதவரம் பால்பண்ணை போலிஸார் சிவகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories