தமிழ்நாடு

“உன்னிடம் ஒரு புகைப்படம் கூட இல்லையா?” : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியிடம் ஆதாரம் கேட்ட சென்னை IIT !

“உன்னிடம் ஒரு புகைப்படம் கூட இல்லையா?” எனக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் சென்னை ஐஐடி நிர்வாகம் ஆதாரம் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“உன்னிடம் ஒரு புகைப்படம் கூட இல்லையா?” : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியிடம் ஆதாரம் கேட்ட சென்னை IIT !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை ஐ.ஐ.டி வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறார். இதேபிரிவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்கள் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து புகார் தெரிவித்த மாணவியை, பேரா.எடமன பிரசாத் சாதி ரீதியாக, அவமானப் படுத்தி, தொடர் தொந்தரவு கொடுத்துள்ளார். இதன்பிறகு, கல்வி வளாகம், ஆய்வுக்கூடத்திலும் வைத்து மாணவியை, கிங்ஷூக்தேப் ஷர்மா இரண்டு முறை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்.

கல்வி சுற்றுலா சென்ற இடத்தில், கிங்ஷூக்தேப் ஷர்மா, மாணவியை அறைக்குள் அடைத்து அந்தரங்க பகுதிகளை செல்போனில் படம் பிடித்துள்ளார். அதைக்காட்டி கிங்ஷூக்தேப் ஷர்மா மற்றும் அவரது நண்பர்கள் பார்வதியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த தொந்தரவு தாங்காமல், 2020 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி ஐ.ஐ.டி உள்புகார் கமிட்டியிடம் மாணவி புகார் செய்தார். இதை விசாரித்து இடைக்கால அறிக்கையை நிர்வாகத்திற்கு புகார் கமிட்டி கொடுத்தது. அதில், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது. வக்கிரமாக நடந்து கொண்டது போன்ற அம்சங்கள் உறுதிபடுத்தப்பட்டிருந்தது. அதன்பேரில், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் கல்வி வளாகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் அனைத்து ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.

கிங்ஷூக்தேப் ஷர்மா
கிங்ஷூக்தேப் ஷர்மா

இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி மூன்று முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் பின்னர் தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பினார். புகாரை ஏற்றுக் கொண்ட ஆணையம், வழக்கு பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிங்ஷூக்தேப் ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, முனைவர் ரவீந்திரன், பேரா.எடமன பிரசாத், நாரா யண் பத்ரா, சௌர்வ தத்தா, அயன் பட்டாச்சார்யா ஆகிய 8 பேர் மீது ஐ.பி.சி 354, 354பி, 354சி, 506(1) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல் துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுவந்த போலிஸார் கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த கிங்ஷூக்தேப் ஷர்மாவை போலிஸார், கடந்த மார்ச் 28ஆம் தேதி கைது செய்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்ற உத்தரவை காண்பித்த நிலையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதனையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். சென்னை மயிலாப்பூர் காவல்துறையிடமிருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருன் ஹெல்டர் நேற்று முன் தினம் விசாரணை நடத்தினர்.

“உன்னிடம் ஒரு புகைப்படம் கூட இல்லையா?” : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியிடம் ஆதாரம் கேட்ட சென்னை IIT !
HP

அப்போது, மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு விசாரணைக்குழுவினருக்கு காட்டினர். பின்னர் விசாரணையில், ஆய்வக வழிகாட்டி ஒருவர் தன்னை பலவந்தமாக தள்ளிவிட்டு தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, அதற்கு அவர்கள் தன்னிடம் ஆதாரங்கள் கேட்டனர். உன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஒரு புகைப்படம் கூட உன்னிடம் இல்லையா என்று கேட்டனர்.

அதுமட்டுமல்லாது நான் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தபின்னர், நிர்வாகம் தன்னை தொடர்ந்து கொடுமைப் படுத்தியது. “நீயே ஒரு குப்பை. வெளியே போ..’ என்று கட்டாயப்பட்டுத்தினார்கள். மேலும் எனது முனைவர் பட்டத்திற்காக சமர்பித்த கட்டுரைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த கட்டுரைகள் எங்கிருக்கிறது என்றுக் கூடத் தெரியவில்லை. என்னைப் போல பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அமையாக இருந்து வருகின்றனர். மேலும் மாணவி கண்ணீர் மல்க கூறிய சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories