தமிழ்நாடு

“மொக்கையான மொழியை திணிக்காதீங்க.. நாங்க சிறப்பான மொழி வச்சிருக்கோம்” : இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம் !

மொக்கையான இந்தி மொழியை திணிக்காதீங்க என இயக்குநர் கரு பழனியப்பன் விமர்சித்துள்ளார்.

“மொக்கையான மொழியை திணிக்காதீங்க.. நாங்க சிறப்பான மொழி வச்சிருக்கோம்” : இயக்குநர் கரு.பழனியப்பன் காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியைத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

அரசியல் கட்சித் தலைவர்கள் இல்லாமல் சினிமா நட்சத்திரங்களும் பா.ஜ.கவின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 'தமிழணங்கு' என்ற ட்விட்டர் புகைப்பட பதிவு வைரலானது.

தற்போது கூட இந்தி தேசிய மொழி என கூறிய நடிகர் அஜய் தேவ்கன் சமூகவலைதள பதிவுக்கு நடிகர் கிச்சா சுதீப், நடிகை திவ்யா ஸ்பந்தனா என பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், எங்களுக்கு இந்தி வேண்டாம். அதைவிடச் சிறப்பான மொழி எங்களிடம் உள்ளது என இயக்குநர் கரு பழனியப்பன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். நடிகரும், திரைபட இயக்குநருமான பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய கரு.பழனியப்பன், "ஆங்கிலத்தை விட தமிழ் மிகவும் வளமையான மொழி. அதனால் எங்களுக்கு இந்தி மொழி எல்லாம் வேண்டாம். அதைவிடச் சிறப்பான மொழி நாங்க வச்சிருக்கோம். நீங்க மொக்கையான மொழியை எங்களிடம் திணிக்க வேண்டாம்.

ஏ.ஆர். ரஹ்மானை அவரின் இசையாமல் நமக்கு முதலில் பிடித்தது. பிறகு சிறந்த கணவனாக, தந்தையாக அவரை பிடித்தது. தற்போது இவ்வளவு தெளிவான அரசியல் தெரிந்தவரா இவர் என்ற இடத்தில் தான் ஏ.ஆர். ரஹ்மான் மிகச் சிறந்தவராக நமக்குத் தெரிகிறார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories