தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சியில் அறநிலையத்துறை செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன” : முதல்வரை பாராட்டிய பொன்னம்பல அடிகளார் !

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார்.

“தி.மு.க ஆட்சியில் அறநிலையத்துறை செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன” : முதல்வரை பாராட்டிய பொன்னம்பல அடிகளார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் (25.4.2022) நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ.15 கோடி செலவில் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி திருக்கோயில்களில் பணிபுரியும் தினக் கூலி/தொகுப்பூதியப் பணியாளர் கள் 33 நபர்களுக்கு பணி வரன் முறை செய்து அதன் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இதில் கலந்துகொண்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியதாவது :-

இந்து சமய அறநிலையத் துறையின் புதிய கட்டடம் கால்கோள் இடப்பட்டது. இத்துறை வரலாற்றிலே பெரிய சாதனை ஆகும். ஏறத்தாழ 1950-ஆம் ஆண்டுக் குப்பிறகு, புதிய கட்டடம் இல்லாமல் செயல்பட்டு வந்த இந்து சமய அறநிலை யத்துறை அலுவலகத்திற்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் சதுர அடியில் நவீன வசதிகளோடு தகவல் தொடர்புடைய ஆணையர் அலுவலகம் உருவாவது, வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குறிப்பிட்டார்.

குமரகுருபர சுவாமிகள் பாராட்டு!

கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமி கள் பேசும்போது தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டிலே பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது, மகிழ்ச்சிக்குரியதாக இருக்கின்றது. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசத் திருமணத்திட்டம், ஓதுவார்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, 5 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக பணி புரிபவர்களுக்கு நிரந்தர அடிப்படையில் கால நிர்ணயம் செய்து ஊதியம் வழங்கி 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனம் வழங்கியிருப்பது மகிழ்விற்குரியது. இவ்வாறு குமரகுருபர சுவாமிகள்

பேசினார்

banner

Related Stories

Related Stories