தமிழ்நாடு

மீடியனில் மோதி உருண்டோடிய கார்.. 2 பெண்கள் உட்பட மூவர் பலி.. பெரம்பலூரில் சாலை விபத்தில் நடந்த கோரம்!

பெரம்பலூரில் மீடியனில் கார் மோதியத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீடியனில் மோதி உருண்டோடிய கார்.. 2 பெண்கள் உட்பட மூவர் பலி.. பெரம்பலூரில் சாலை விபத்தில் நடந்த கோரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல்லை சேர்ந்த கமலக்கண்ணன் (42). இவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலகராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா (40), திருவாரூர் மாவட்டம், எடமேலையூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் மனைவி வேம்பு (60), இவரது மகன் ராமச்சந்திரன் (45) மற்றும் கோவையை சேர்ந்த மலர்தம்பி மனைவி மணிமேகலை (65) ஆகிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஆவர்.

மீடியனில் மோதி உருண்டோடிய கார்.. 2 பெண்கள் உட்பட மூவர் பலி.. பெரம்பலூரில் சாலை விபத்தில் நடந்த கோரம்!

இவர்கள் ஒரு சஃபாரி காரில் ஆந்திராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டனர். காரை கமலக்கண்ணன் ஓட்டி வந்தார்.

கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரம் பகுதியில் வந்த போது எதிர்பாரதவிதமாக சென்டர் மீடியனில் மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. இதனால் 100 அடி தொலைவுக்கு கார் உருண்டோடியிருக்கிறது.

மீடியனில் மோதி உருண்டோடிய கார்.. 2 பெண்கள் உட்பட மூவர் பலி.. பெரம்பலூரில் சாலை விபத்தில் நடந்த கோரம்!

இந்த விபத்தில் கமலக்கண்ணன், லதா, வேம்பு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த பாடாலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற இறந்துபோன 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த ராமச்சந்திரன், மணிமேகலை ஆகியோரை சிகிச்சைக்காகவும், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாடாலூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories