தமிழ்நாடு

’காச திருப்பி கொடுங்க’.. தனியார் பேருந்தில் திடீர் விசிட்: அதிரடி காட்டிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

சென்னை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

’காச திருப்பி கொடுங்க’..  தனியார் பேருந்தில் திடீர் விசிட்: அதிரடி காட்டிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்து நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை தனியார் ஆம்னி பேருந்துகளில் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பேருந்தில் இருந்த பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டார். இதற்கு பயணிகள் வழக்கத்தை விட கூடதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

உடனே அமைச்சர் சிவசங்கர் கூடதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் உங்களுக்கு திருப்பித் தரப்படும் என கூறினார். பிறகு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துறை அமைச்சர் ஒருவர் ஆய்வு செய்வது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories