தமிழ்நாடு

ஷோரூமில் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறிய பேட்டரி.. 17 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம் !

சென்னையில் வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபதில் 17 எலக்ட்ரிக் பைக் எரிந்து சேதமடைந்தது.

ஷோரூமில் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறிய பேட்டரி.. 17 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்து குன்றத்தூர் பிரதான சாலையில் எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யும் ஷோரூமி ஒன்று உள்ளது. இங்கு சித்திரை தமிழ்புத்தாண்டினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷோரூமில் இருந்த எலக்ட்ரிக் பைக் ஒன்றிற்கு அங்கிருந்த ஊழியர்கள் சார்ஜ் செய்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வாகனத்தின் பேட்டரி வெடித்து தீ பிடித்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே ஷோரூமை விட்டு வெளியே வந்தனர்.

மேலும் தீ ஷோரூம் முழுவதும் பரவியதால் அங்கிருந்த 17 எலட்ரிக் பைக்குகளும் தீயில் கருகி நாசமானது. இந்த சம்பவம் குறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக எலக்ட்ரிக் பைக்குகள் சார்ஜ் செய்யும் போது அதன் பேட்டரிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் பைக் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories