தமிழ்நாடு

“விருந்துக்கு கூப்பிட்டுட்டு பீஸ் வைக்கல” : உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

விருந்தில் குறைவாக கறி வைத்ததால் எழுந்த பிரச்னையில், உருட்டுக் கட்டையால் தாக்கிய வாலிபர்களை போலிஸார் கைது செய்தனர்.

“விருந்துக்கு கூப்பிட்டுட்டு பீஸ் வைக்கல” : உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விருந்தில் குறைவாக கறி பரிமாறப்பட்டதால் எழுந்த பிரச்னையில், உருட்டுக் கட்டையால் தாக்கிய வாலிபர்களை போலிஸார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியைச் சேர்ந்தவர் சேகர் (35). நேற்று முன்தினம், சேகரின் சகோதரர் வீட்டில் நடந்த கறி விருந்திற்கு, அவர் தனது நண்பர்களை அழைத்திருந்தார்.

இந்த விருந்தின்போது சேகரின் நண்பர்கள் ஜெய்சங்கர் (40), சுந்தரமூர்த்தி (25) ஆகியோருக்கு குறைவாக கறி பரிமாறப்பட்டுள்ளது. விருந்தில் தங்களுக்கு கறி அதிகமாக வைக்கவில்லை என ஜெய்சங்கரும், சுந்தரமூர்த்தியும் சேகரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நண்பர்கள், அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் சேகரை சரமாரியாக தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதில் காயமடைந்த சேகர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிப்பாளையம் போலிஸார், ஜெய்சங்கர், சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories