தமிழ்நாடு

சாக்லேட் கடையில் திடீர் சோதனை: மூட்டை மூட்டையாக பிடிபட்ட 300 கிலோ குட்கா, ஹான்ஸ்; ராணிப்பேட்டையில் அதிரடி

தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை பதுக்கிய சாக்லேட் கடை உரிமையாளர் இருவர் கைது.

சாக்லேட் கடையில் திடீர் சோதனை: மூட்டை மூட்டையாக பிடிபட்ட 300 கிலோ குட்கா, ஹான்ஸ்; ராணிப்பேட்டையில் அதிரடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாக்லேட் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 300 கிலோ ஹான்ஸ், குட்கா பறிமுதல் - கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சாக்லேட் விற்பனை செய்யும் கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்த வாலாஜாப்பேட்டை போலிஸார் கடையின் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்தனர்.

சாக்லேட் கடையில் திடீர் சோதனை: மூட்டை மூட்டையாக பிடிபட்ட 300 கிலோ குட்கா, ஹான்ஸ்; ராணிப்பேட்டையில் அதிரடி

வாலாஜாபேட்டையில் உள்ள நரசுஜிராவ் தெருவில் சாக்லேட் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா விற்பனை நடைபெறுவதாக DSP பிரபுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் வாலாஜாபேட்டை போலிஸார் சாக்லேட் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான, 300 கிலோ ஹான்ஸ், குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கடையின் உரிமையாளர் ஜீவாராம்(21) மற்றும் உதவியாளர் காலூசிங்(31) ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories