தமிழ்நாடு

குழந்தைக்கு ஆசையாய் வாங்கிய சிலை.. உடைந்த சிலைக்கு பதில் புதிய சிலை அனுப்பி ஆச்சரியப்படுத்திய அமைச்சர்!

துபாய் கண்காட்சியில் வாங்கிய சிலை உடைந்ததால் அதற்கு பதிலாக புதிய சிலையை அமைச்சர் மதிவேந்தன் அனுப்பிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைக்கு ஆசையாய் வாங்கிய சிலை.. உடைந்த சிலைக்கு பதில் புதிய சிலை அனுப்பி ஆச்சரியப்படுத்திய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், கடந்த மார்ச் 24, 2022 முதல் மார்ச் 28, 2022 வரையிலான 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த தமிழர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடினார். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் உலக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கிய போது அங்கு வந்த நபர் ஒருவர் தனது குழந்தைக்கு பரிசு ஒன்று வாங்க முயற்சித்திருக்கிறார்.

அதன்படி, துபாய் கண்காட்சியில் தமிழக சுற்றுலா அரங்கில் வைக்கப்பட்ட பொருட்களில், தனது குழந்தைக்கு யாணை சிலை ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில நாளிலேயே அந்த சிலை தவறுதலாக கீலே விழுந்ததில் உடைந்து நொறுங்கியுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தந்தை சிலை உடைந்ததை முகநூலில் பதிவிட்டு, கல் சிலை என விற்பனையாளர் ஏமாற்றி விற்றுவிட்டதாகக் கூறி, தனது வருத்ததைத் தெரிவித்திருந்தார். இந்த பதிவு, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இதனையடுத்து அதுதொடர்பாக அமைச்சர் நேரடியாக விசாரித்ததில் அது கல் சிலை அல்ல, சிமெண்ட்டால் செய்யப்பட்ட சிலை என்று தான் விற்பனையாளர் விற்று உள்ளார் என்பதை கேட்டறிந் அவருக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதுமட்டுமல்லாது, குழந்தை ஏமாற்றம் அடையக்கூடாது என்று அழகான யாணை சிலைகளை பரிசாக தந்து குழந்தையையும் பெற்றோரையும் ஆச்சரியப்படுத்தினார் அமைச்சர் மதிவேந்தன். அமைச்சரின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டினை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories