தமிழ்நாடு

”1 கோடி கொடுத்தா வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து தப்பிக்கலாம்” - தொழிலதிபரிடம் பணம் பறித்த VHP நிர்வாகி கைது!

விஷ்வ இந்து பரிஷத் தென் சென்னை மாவட்ட இணை செயலாளர் மற்றும் அவரது மகன் கைது.

”1 கோடி கொடுத்தா வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து தப்பிக்கலாம்” - தொழிலதிபரிடம் பணம் பறித்த VHP நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழில் அதிபரிடம், வரி ஏய்ப்பு நோட்டீசை ரத்து செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் விஷ்வ இந்து பரிஷத்தின் தென் சென்னை மாவட்ட இணைச் செயலாளர் தணிகைவேல் மற்றும் அவரது மகன் தீபக் ஆகிய இருவரை கைது செய்து பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பெரும்புதூரைச் சேர்ந்த வெங்கடேசன் எனும் தொழிலதிபர் காஞ்சிபுரத்தில் நடத்தி வரும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு போலி வருமான வரி அதிகாரியை வைத்து நடத்தப்பட்ட ஜிஎஸ்டி சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி வெங்கடேசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பியிருக்கிறார்கள்.

மேலும், தனக்கு அதிகாரிகளை தெரியும் எனக் கூறி வரி ஏய்ப்பு தொடர்பான நடவடிக்கையை நிறுத்த வேண்டுமானால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என தணிகைவேல் கேட்டுள்ளார். தணிகைவேல் தனது மகன் தீபக் போலி வருமானவரித்துறை அதிகாரியாக அறிமுகம் செய்ததை நம்பிய வெங்கடேசன் ஒரு கோடி ரூபாய் பணத்தையும் கொடுத்து உள்ளார்.

பணம் கொடுத்த பிறகும் தொடர்ந்து வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்ததை அடுத்து வெங்கடேசன் போலிஸில் புகார். இதையடுத்து பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலிஸார் விஷ்வ இந்து பரிஷத் பிரமுகரான தணிகைவேலையும் அவரது மகனையும் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories