தமிழ்நாடு

குடிபோதையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியை கொடுத்த புகாரில் போக்சோவில் சிறையில் அடைத்த போலிஸ்!

ஆரணி அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மீது 1098 அலைபேசியில் ஆசிரியை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலிஸார் சிறையில் அடைத்தனர்.

குடிபோதையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியை கொடுத்த புகாரில் போக்சோவில் சிறையில் அடைத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காமக்கூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி - சகுந்தலா தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் கட்டிட மேஸ்திரியான அய்யசாமி குடிபோதையில் வீட்டிற்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த தன்னுடைய 9ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு கட்டடி மேஸ்திரி குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும் இது சம்மந்தமாக 9ம் வகுப்பு பள்ளி மாணவி வெளியில் சொல்ல முடியாமல் சோகத்துடன் காணப்பட்டார். இதனை அறிந்த நடுக்குப்பம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, பள்ளி மாணவியிடம் விவரத்தை கேட்டறிந்த போது, தன்னுடைய அப்பாவே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பள்ளி ஆசிரியை உடனடியாக மாவட்ட இலவச 1098 என்ற எண்ணிற்கு அழைத்து நடத்த கொடூமையை எடுத்துரைத்துள்ளார்.

மேலும் அதன் பேரில் மாவட்ட சமூக நல துறை அலுவலர் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், போலிஸார் கட்டிட மேஸ்திரி அய்யாசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories