தமிழ்நாடு

தூக்கத்தில் 2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த சோகம்.. அந்தரத்தில் தொங்கிய இளைஞர் : பகீர் சம்பவம்!

தூக்கத்தில் உருண்டு விழுந்து, தொடையில் கம்பி குத்தி அந்தரத்தில் தொங்கிய இளைஞரை, தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

தூக்கத்தில் 2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த சோகம்.. அந்தரத்தில் தொங்கிய இளைஞர் :  பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தில், பாதியில் கைவிடப்பட்ட இரண்டடுக்கு கட்டடம் உள்ளது. இங்கு, வட மாநிலம் அசாமை சேர்ந்த பிரேம் (27) என்பவர், காவலாளியாக வேலை செய்து வந்தார். பணி முடித்து, இரண்டாவது மாடியில் துாங்கிக்கொண்டு இருந்தார்.

தூக்கத்தில் உருண்டு, இரண்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். அப்போது முதல் மாடியில் நீட்டிக்கொண்டிருந்த கட்டுமான கம்பி, பிரேமின் தொடையின் ஒரு புறம் குத்தி, மறுபுறம் கம்பி வெளியேறியதால், தலைக்கீழாக, அந்தரத்தில் தொங்கியபடி வலியால் துடிதுடித்தார்.

அதிகாலை அருகில் இருந்த பொதுமக்கள் பார்த்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பெரும்புதுார் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணகுமார், போக்குவரத்து அலுவலர் ரவிசந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பிரேமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜெனரேட்டர் பொருத்தி, 'கட்டர்' இயந்திரம் வாயிலாக கம்பியை துண்டித்து, ஒரு மணி நேரம் போராடி, பிரேமை மீட்டனர். பின்னர் வாலிபர் பிரேமை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி தொடையில் குத்தியிருந்த கம்பியை அறுவை சிகிச்சைமூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

துாக்கத்தில் உருண்டு விழுந்து, தொடையில் கம்பி குத்தி அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வடமாநில இளைஞரை போராடி மீட்ட, தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

banner

Related Stories

Related Stories