தமிழ்நாடு

பள்ளி பேருந்துகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.. ? - ஒரு பார்வை!

பள்ளிப் பேருந்து மோதி இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பள்ளி பேருந்துகள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பள்ளி பேருந்துகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.. ? - ஒரு பார்வை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இந்த தம்பதிகளின் மகன் தீக்சித் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் பள்ளி வாகனத்திலேயே பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பள்ளி பேருந்தில் சென்றுள்ளார். பள்ளிக்குச் சென்ற பிறகு பேருந்திலிருந்து இறங்கி தனது வகுப்பறைக்குச் சென்று பள்ளி பேருந்து மாணவர் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஓட்டுநர் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இதையடுத்து பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகள் சரியான விதிமுறைகளைப் பின்பற்றப்படுகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இதையடுத்து பள்ளி பேருந்துகள் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்பதை பார்ப்போம்:- பள்ளி பேருந்தின் முன்புறமும், பின்புறமும் பள்ளி பேருந்து என்று எழுதப்பட வேண்டும். மேலும் பேருந்தின் பக்கவாட்டில் 60 செ.மீ விட்டத்தில் பள்ளி பேருந்து என்ற சின்னம் இருக்க வேண்டும்.

பள்ளி பேருந்துகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.. ? - ஒரு பார்வை!

வாடகை ஒப்பந்த ஊர்தி என்றால் பள்ளி செல்லும் குழந்தைகளின் பணிக்கு என்று பேருந்தில் குறிப்பிட வேண்டும். பேருந்தில் முதலுதவிப் பெட்டியைக் கண்டிப்பாகப் பராமரிக்க வேண்டும். நீளவாக்கில் உள்ள பள்ளி பேருந்தில் உள்ள ஜன்னல்களில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும்.

தீயணைக்கும் கருவிகள் வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். பேருந்தில் பள்ளியின் விபரங்களும், தொலைப்பேசி எண்ணும் குறிப்பிட வேண்டும். பேருந்தில் உள்ள கதவுகளுக்குப் பாதுகாப்பான தாழ்ப்பாள் இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் பாடப் புத்தகங்களைப் பாதுகாப்பாக வைத்திடப் பேருந்து இருக்கையின் கீழ் அதற்கான வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

பள்ளி சார்பாகப் பேருந்தில் காப்பாளர் ஒருவர் உடன் பயணிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோரோ அல்லது ஆசிரியரோ பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தை ஓட்டுபவர் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories