தமிழ்நாடு

வாயில் சோற்றைத் திணித்து பெற்ற குழந்தையை கொன்ற தாய்.. ஊட்டியில் திடுக்கிடும் சம்பவம்!

உதகை அருகே காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஒரு வயது குழந்தையை கொலை செய்த தாயை காவல் துறையினர் கைது செய்தனர்.

வாயில் சோற்றைத் திணித்து பெற்ற குழந்தையை கொன்ற தாய்.. ஊட்டியில் திடுக்கிடும் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதற்கிடையே கீதா, கார்த்திக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

கீதா தன் இரண்டாவது மகனான நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும், கார்த்திக் நித்தீஷுடனும் கோவையிலும் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் 14-ஆம் தேதி குழந்தை திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே கீதா அந்தக் குழந்தையை உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் கொண்டு சென்றார்.

அப்போது அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் உதகை நகர B1 காவல் துறையினர் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் முடிந்துள்ளது. அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் நடைபெறாமல் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

3-வதாக கார்த்திக்கிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் கீதாவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கார்த்திக்கை விட்டு பிரிந்த கீதா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இதில் ஒரு வயது குழந்தை இறந்தது குறித்து பெற்றோரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

வாயில் சோற்றைத் திணித்து பெற்ற குழந்தையை கொன்ற தாய்.. ஊட்டியில் திடுக்கிடும் சம்பவம்!

அதில், கீதா குழந்தையை சரியாகப் பராமரிக்காமல் இருந்ததும், மேலும் சிலருடன் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தை விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தினர்.

இதனை அறிவதற்காக குழந்தை நித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான பரிசோதனையின் முடிவு சமீபத்தில் உதகை போலிஸாருக்கு கிடைத்தது. அதில் கீதா குழந்தை தூங்குவதற்காக தொட்டிலை ஆட்டியபோது, வேண்டுமென்றே சுவற்றில் குழந்தையின் தலையை அடித்து உள்ளார்.

மேலும் தனது தனது காதலுக்கு இடையூறாக குழந்தை இருந்ததால், அடிக்கடி வெளியே சென்று வர முடியவில்லை. தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருந்தது. இதனால் கீதா தனது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் ஊட்டி விட்டதுடன், மதுபானமும் கொடுத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற குழந்தையை கொலை செய்த கீதா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories