தமிழ்நாடு

‘ஒரு முறை காமராஜர் காரில்…’ கதை வேண்டாம்.. வருகிறது தி.மு.க அரசின் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்!

‘ஒரு முறை காமராஜர் காரில்…’ கதை வேண்டாம்.. வரும் தலைமுறைக்கு உண்மையைச் சொல்ல வருகிறது தி.மு.க அரசின் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்!

‘ஒரு முறை காமராஜர் காரில்…’ கதை வேண்டாம்.. வருகிறது தி.மு.க அரசின் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் அமைக்கப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

இன்று இறுதிநாள் அமர்வில் பட்ஜெட் விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தனர். நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலுரை ஆற்றினார்.

அப்போது, “அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டம் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் பொருந்தும்” என அறிவித்தார்.

மேலும், காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories