தமிழ்நாடு

“ஐயா, இவரையும் விசாரிங்க.. இவருக்கு எல்லாம் தெரியும்” : எடப்பாடி பழனிசாமியை மாட்டிவிட்ட வா.புகழேந்தி!

எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.

“ஐயா, இவரையும் விசாரிங்க.. இவருக்கு எல்லாம் தெரியும்” : எடப்பாடி பழனிசாமியை மாட்டிவிட்ட வா.புகழேந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகச் சொல்லி எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9வது முறையாக சம்மன் அனுப்பியதையொட்டி நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளதைத் தொடர்ந்து, ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி வா.புகழேந்தி, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில், “ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடப்பாடி பழனிசாமியுடன் நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன. நடந்தவை அனைத்தும் பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும்.

மக்கள் பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அப்பல்லோ நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டை இலையை மீட்க நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் மூலம் தெளிவாகிறது. எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று நம்புகிறேன்” என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories