தமிழ்நாடு

"நுழைவுத்தேர்வை எந்த விதத்திலும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிட மாட்டோம்” : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத்தேர்வை அனுமதிக்கமாட்டோம் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

"நுழைவுத்தேர்வை எந்த விதத்திலும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிட மாட்டோம்” : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு எந்த விதத்தில் நுழைய முயற்சித்தாலும் முதலமைச்சர் தீவிரமாக எதிர்ப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2022-23 மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது.

நுழைவுத் தேர்வு தமிழகத்தில் எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார்.

மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதனை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி மகளிருக்கான சம உரிமை உலகத் தரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் தன்னுடைய கண்காணிப்பில் நேரடியாக கவனித்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories