தமிழ்நாடு

கத்தி முனையில் தொழிலதிபரின் மகனை கடத்திய கும்பல்.. ஆந்திராவில் மீட்ட தமிழ்நாடு போலிஸ் - நடந்தது என்ன?

ஒரு கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பலை ஆந்திராவில் போலிஸார் கைது செய்தனர்.

கத்தி முனையில் தொழிலதிபரின் மகனை கடத்திய கும்பல்.. ஆந்திராவில் மீட்ட தமிழ்நாடு போலிஸ் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை அடுத்த பாடி சத்தியவதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியம். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தங்களுக்குச் சொந்தமான ஆட்டோமொபைல்ஸ் கம்பெனியை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைகளை முடித்துவிட்டு காரில் ஆதர்ஷ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தனது வீட்டின் அருகே வந்தபோது, மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆதர்ஷை தங்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே சரவணனுக்கு தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் சம்பவ இடத்திற்கு வந்தபோது மகன் வந்த கார் மட்டும் நின்றுள்ளது. பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் ஆதர்ஷை காரில் ஏற்றிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து அந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரித்தபோது, அந்த கும்பல் ஆந்திர மாநிலம், காளஹஸ்தி பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது. உடனே அங்கு சென்ற போலிஸார் கடத்தல் கும்பலிடம் சிக்கிய ஆதர்ஷை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் கடத்தல் கும்பலிடம் விசாரணை நடத்தியபோது, சென்னை முகப்பேரைச் சேர்ந்த சிலம்பரசன், அயப்பாக்கம் அபர்ணா நகரை சேர்ந்த ஜீவன் பிரபு ஆகியோர் என்பது தெரியவந்தது.

ஆதர்ஷ் சுப்பிரமணியனின் தந்தை சரவணனும், செந்தில்குமார் என்பவரும் இணைந்து ஆட்டோமொபைல் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது பங்கை சரவணனிடம், சுப்பிரமணியன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பங்கை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், சரவணனின் அண்ணன் ராஜசேகரை 2019ஆம் ஆண்டு கடத்தியுள்ளார். இந்த வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , ஏப்படியாவது பழிவாங்கவேண்டும் என நினைத்து, மீண்டும் சரவணனின் மகனை ஆள் வைத்து சிலம்பரசன் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், சிலம்பரசன், ஜீவன்பிரபு ஆகியோரை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories