தமிழ்நாடு

4.5 கிலோ எடை.. அதிரடி ரெய்டு விட்ட வனத்துறை.. அரியவகை மண்ணுளி பாம்பை பதுக்கியவருக்கு வலைவீச்சு!

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

4.5 கிலோ எடை.. அதிரடி ரெய்டு விட்ட வனத்துறை.. அரியவகை மண்ணுளி பாம்பை பதுக்கியவருக்கு வலைவீச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் அருகே சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவரது வீட்டில் வியாபார நோக்கத்திற்காக மருத்துவ குணம் வாய்ந்த மண்ணுளிப் பாம்பை பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் பேரில் நாகர்கோவில் மற்றும் பூதபாண்டி வனத்துறை அதிகாரிகள் குழு அரவிந்தின் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது அந்த வீட்டில் நான்கரை கிலோ எடை கொண்ட 141 சென்டிமீட்டர் நீளம், 22 சென்டி மீட்டர் சுற்றளவு கொண்ட அரியவகை மண்ணுளிப் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் சோதனையிட வருவதை அறிந்து பாம்பை பதுக்கி வைத்திருந்த அரவிந்த் தப்பியோடியிருக்கிறார்.

4.5 கிலோ எடை.. அதிரடி ரெய்டு விட்ட வனத்துறை.. அரியவகை மண்ணுளி பாம்பை பதுக்கியவருக்கு வலைவீச்சு!

இதனையடுத்து வனத்துறையினர் பாம்பை நாகர்கோவில் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அதன்படி மீட்கப்பட்ட மண்ணுளிப்பாம்பு வெளிநாட்டில் பல கோடி ரூபாய் மதிப்பு உடையது என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தடை செய்யப்பட்ட இந்த உயிரினத்தை யாரும் வைத்திருக்கவோ, விற்கவோ செய்தால் அவர்கள் மீது வன குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதும் செய்யபடுவார்கள்.

அந்த வகையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்தில் அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், தப்பியோடிய அரவிந்த்-ஐ பிடிக்கும் வேட்டையில் மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories