தமிழ்நாடு

கூலிப்படையை ஏவிய மகன்? - பைக்கில் சென்றவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல் : பகீர் தகவல்!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலிப்படையை ஏவிய மகன்? - பைக்கில் சென்றவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல் : பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டு நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி (65). இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரி (37) என்ற மகளும், சரவணன் (35) மகனும் உள்ளனர். உமாபதியின் மனைவி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.

மேலும் திருமணமான மகள் லோகேஸ்வரிக்கு இரண்டு குழந்தைகளும், சரவணனுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும் லோகேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்டதாகவும் இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

உமாபதிக்கு சொந்தமாக கன்னிவாக்கத்தில் ஒரு வீடும், காயரம்பேடு பகுதியில் ஒரு வீடும் உள்ளன. அதில் ஒரு வீட்டை சரவணனுக்கும், மற்றொரு வீட்டை லோகேஸ்வரியின் முதல் மகனான பரமேஸ்வரனுக்கும் உமாபதி எழுதி வைத்துவிட்டார். இதில் இரண்டு வீட்டையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி சரவணன் கடந்த ஒரு ஆண்டாக தந்தையிடம் சண்டை போட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று காலை உமாபதி தனது பைக்கில் கன்னிவாக்கம் பகுதிக்கு வழக்கம்போல் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல், கன்னிவாக்கம் அரசுப் பள்ளி அருகில் உமாபதியை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உமாபதி-யின் மகன் சரவணன் சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்தாரா அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக உமாபதி கொல்லப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories