தமிழ்நாடு

வரலாற்றில் முதல் முறை; நடப்பாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் எவ்வளவு தெரியுமா? - அசத்தும் வணிக வரித்துறை

சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்தரகர்களுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரலாற்றில் முதல் முறை; நடப்பாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் எவ்வளவு தெரியுமா? - அசத்தும் வணிக வரித்துறை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக்கட்டணம் அனைத்தும் இணையவழி மூலமாக செலுத்தும் நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும், சார்பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின் படி பத்திரப்பதிவு மேற்கொள்ளவும் மற்றும் வழிகாட்டி மதிப்பீட்டினை குறைத்தோ அல்லது அதிகப்படுத்தியோ பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வரலாற்றில் முதல் முறை; நடப்பாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் எவ்வளவு தெரியுமா? - அசத்தும் வணிக வரித்துறை

அதேபோல் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் வழிகாட்டி மதிப்பீட்டினை குறைத்து பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழப்பு வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்தரகர்களுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது பதிவுத்துறை தலைவர், அரசு செயலாளர் மற்றும் கட்டுபாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories