தமிழ்நாடு

"ஓமந்தூரார் வளாகம்'' வெறும் கட்டடமல்ல மாநில சுயாட்சியின் அடையாளம்!

முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையிலான திமுக ஆட்சியின் போது 12-06-2008 அன்று புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

"ஓமந்தூரார் வளாகம்'' வெறும் கட்டடமல்ல மாநில சுயாட்சியின் அடையாளம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் நெஞ்சுக்கு நெருங்கிய திட்டமான புதிய தலைமைச் செயலகம் 'ஓமந்தூரார் வளாகம்' திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று.

"ஓமந்தூரார் வளாகம்'' வெறும் கட்டடமல்ல மாநில சுயாட்சியின் அடையாளம்!

ஒன்றிய அரசுக்கு சொந்தமான தற்போதைய தலைமைச் செயலக கட்டடம், பொது மக்கள் வந்து செல்வதற்கு வசதியற்ற நிலையில் இருப்பதாலும், கட்டடப் சீரமைப்பு பணிகளை மாநில அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள வழி இல்லை என்பதாலும், தமிழ்நாட்டுக்கென சொந்தமாக தலைமைச் செயலகம் கட்டுவதற்கு திட்டம் வகுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையிலான திமுக ஆட்சியின் போது 12-06-2008 அன்று புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை சட்டப்பேரவைக்கு அனுப்புகின்றனர். பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் பொது மக்களும் அச்சட்டப்பேரவைக்கு வர வேண்டும், அரசின் செயல்பாடுகளில், உருவாக்கும் திட்டங்களில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்ற ஜனநாயக சிந்தனையோடு மக்கள் வளாகத்தையும் உள்ளடக்கிய முதல்வர் வளாகம், சட்டப்பேரவை வளாகம், நூலக வளாகம் ஆகியவற்றை A பிளாக் எனவும், தலைமைச் செயலக வளாக கட்டடம் பி பிளாக் எனவும் உருவாக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

புதிய தலைமைச் செயலக கட்டடம் வளர்வதை இரவு, பகல் பாராது கண்காணித்து வந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். ரூ.903.55 கோடி திட்ட மதிப்பீட்டில், திராவிட கட்டடக்கலை அம்சங்களுடன், பசுமை கட்டடங்களாக தொடங்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் ரூ 551 கோடி செலவு செய்யப்பட்டு பணிகள் முடியும் தருவாயில், 13-03-2010 அன்று அப்போதைய பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக, தன் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மீதி கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தியது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீதுள்ள பொறாமையின் காரணமாக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஓமத்தூரார் வளாகத்தை மருத்துவமனையாக மாற்றியது.

பொய்யான காரணங்களை சொல்லி அத்திட்டத்தை தடுத்து, மாற்றி அமைத்து அற்ப மகிழ்ச்சி அடைந்த கூட்டம் அறிந்திருக்க வாய்ப்பில்லை பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு, கரந்து மறைக்கலும் ஆமோ?

இந்திய நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு எண்ணற்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் நம்பிக்கையில், அன்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியின் சாதனைகளை கைகளைக் கொண்டு மறைக்க முயற்சித்த கூட்டம் தோற்றுப் போனது.

அரசியல் பக்குவமின்றி அதிமுக ஆட்சி காலத்தில் நீக்கப்பட்ட நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் பாடும் கல்வெட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நன்றி - DMK IT WING

banner

Related Stories

Related Stories