தமிழ்நாடு

கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்து இறந்த மயில்கள்.. போலிஸ் அதிரடி நடவடிக்கை - நடந்தது என்ன?

திருப்பத்தூர் அருகே மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக விவசாயி ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்து இறந்த மயில்கள்.. போலிஸ் அதிரடி நடவடிக்கை - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூரை அடுத்த குரும்பட்டி பகுதியில் சாவித்திரி என்பவருடைய நிலத்தை குத்தகை எடுத்து சண்முகம் (71)  என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை வளர்த்து வந்துள்ளார். நெற்பயிர்களை எலிகள் மற்றும் பறவைகள் சேதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் விவசாயி எலிகளை கொள்ளுவதற்காக நெல்லில் விஷத்தைக் கலந்து வைத்துள்ளார்.

அப்போது இரை தேடி வந்த 12 மயில்கள் அதனை சாப்பிட்டு ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளன. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையின, மயிலுக்கு விஷம் வைத்துக் கொன்ற சண்முகம் என்ற விவசாயியை கைது செய்தனர்.

மேலும் 12 மயில்களை எடுத்து வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இந்ச்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories