தமிழ்நாடு

“ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய NCC மாணவி” : புதுச்சேரி காவல்துறை அசத்தல் - குவியும் பாராட்டு!

உலக மகளிர் தினத்தையொட்டி ஒரு நாள் முதல்வர் போன்று, புதுச்சேரி அரசு கல்லூரி மாணவி ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

“ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய NCC மாணவி” : புதுச்சேரி காவல்துறை அசத்தல் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக மகளிர் தினத்தையொட்டி ஒரு நாள் முதல்வர் போன்று, புதுச்சேரி அரசு கல்லூரி மாணவி ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக பணியாற்றினார். உலக மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி காவல்துறை, பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதாவை இன்று "ஒரு நாள் முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரியாக" நியமித்து கவுரவித்தது.

என்.சி.சி மாணவியான நிவேதா, என்.சி.சி உடையில் முத்தியால்பேட்டை காவல்நிலையம் வந்தார். அப்போது காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் ஆகியோர் பூங்கொத்து வரவேற்று, நிலைய அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர். பின்பு நிவேதா காவலர்களின் பணிகளை தெரிந்து கொண்டார்.

தொடர்ந்து, காவல்நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்ட அவர், காவல்நிலைய ஆவணங்களை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து காவல்துறை வாகனத்தில் ஏறிச்சென்று முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுத்தார். ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய நிவேதாவுக்கு சக நண்பர்கள், மகளிர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories