தமிழ்நாடு

“மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டு... தேசிய பிரச்னைகளுக்கு தீர்வு தந்துள்ளது” : தேஜஸ்வி பேச்சு!

“தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் ஈர்ப்புகொண்ட எனது தந்தை லாலு பிரசாத், எங்கள் பீகாரிலும் அதனை செயல்படுத்தினார்.” என தேஜஸ்வி பேசியுள்ளார்.

“மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டு... தேசிய பிரச்னைகளுக்கு தீர்வு தந்துள்ளது” : தேஜஸ்வி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகத்தை ராகுல் காந்தி எம்.பி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிப் பேசிய பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, “தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் ஈர்ப்புகொண்ட எனது தந்தை லாலு பிரசாத், எங்கள் பீகாரிலும் அதனை செயல்படுத்தினார்.

தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோரால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் நிலவும் சமூகநீதி, ஒற்றுமையை காணும்போது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. சமூகநீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம்.

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்கிறது. தேசிய அளவிலான பிரச்னைகளுக்கு பல நேரங்களில் தமிழகம் தீர்வைத் தந்துள்ளது.” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories