தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் இணைந்து காங்கிரஸும் வளர்கிறது” : சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி பேச்சு!

“தமிழ்நாட்டில் தி.மு.க உடன் இணைந்து பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறோம்” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

“தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் இணைந்து காங்கிரஸும் வளர்கிறது” : சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தார்.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெள்ளி பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர் மற்றும் பல முன்னணி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய கே.எஸ்அழகிரி, “தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான மாநிலங்களை மொழி வழி மாநிலமாக பிரித்தது காங்கிரஸ். அதன் காரணமாகவே தனித்தன்மையாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது. மாநிலங்களின் ஒற்றுமைதான் இந்தியா என்பதை அற்புதமாக ராகுல்காந்தி நாடாளுமன்ற பேரவையில் எடுத்துரைத்துள்ளார்.

ராகுல் காந்தி பதவியை அடைய வேண்டும் என்பதற்காக இந்திய அரசியயில் நுழையவில்லை. ஒரு அற்புதமான புரட்சியை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளார். ராகுல் காந்தியின் இறுதிக் கருத்தே இந்திய தேசிய காங்கிரசின் ஒட்டுமொத்த கருத்து.” என்றார்.

“தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் இணைந்து காங்கிரஸும் வளர்கிறது” : சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி பேச்சு!

ராகுல் காந்தி எம்.பி பேசுகையில், “உள்ளாட்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மிக முக்கியமான ஒரு மாநிலம். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வலிமை வாய்ந்த கட்சியாக அமைக்கவேண்டும் என்றால் முதலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தி.மு.க உடன் இணைந்து பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறோம். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன்.

ஒரு அறையில் 50 காங்கிரஸ் தொண்டர்கள் இருந்தால் தமிழகத்தைப் பொருத்தவரை 500 காங்கிரஸ் தொண்டர்கள் இருப்பதற்கு சமம்.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories