தமிழ்நாடு

சென்னையில் 104 வார்டுகளில் தி.மு.க. வெற்றி; கொண்டாட்டத்தில் தொண்டர்கள்; விழாக்கோலத்தில் அறிவாலயம்!

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் இதுவரையில் 104 வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 104 வார்டுகளில் தி.மு.க. வெற்றி; கொண்டாட்டத்தில் தொண்டர்கள்; விழாக்கோலத்தில் அறிவாலயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.

அதில், 21 மாநகராட்சிகளையும் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றுகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளான அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் டெபாசிட்டை இழந்தும், படுதோல்வியையும் தழுவி வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் இதுவரையில் 104 வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 7 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1, மார்க்சிஸ்ட், மதிமுக தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் அதிமுக வெறும் 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்களை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னையில் 104 வார்டுகளில் தி.மு.க. வெற்றி; கொண்டாட்டத்தில் தொண்டர்கள்; விழாக்கோலத்தில் அறிவாலயம்!

இதனிடையே சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மை பலத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மகிழ்ச்சிக் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories