தமிழ்நாடு

பழனிசாமி - வேலுமணி - செங்கோட்டையன் காலி : கொங்கு அ.தி.மு.கவை மொத்தமாக சரித்த தி.மு.க உடன்பிறப்புகள்!

கொங்கு அ.தி.மு.கவை மொத்தமாக சரித்து தி.மு.க வெற்றிவாகை சூடியுள்ளது.

பழனிசாமி - வேலுமணி - செங்கோட்டையன் காலி : கொங்கு அ.தி.மு.கவை மொத்தமாக சரித்த தி.மு.க உடன்பிறப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது. அதேபோல்,119 நகராட்சிகளையும், 320 பேரூராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது. மேலும் அ.தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டிலேயே அ.தி.மு.க-வால் வெற்றி பெறமுடியவில்லை.

கோவை மாநகராட்சியில் தற்போது வரை வெளியான முடிவுகளின்படி 31 இடங்களில் வென்று தி.மு.க கூட்டணி கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல் திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடிவருகின்றனர்.

அதேபோல், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையம் நகராட்சியை 40 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க கைப்பற்றியுள்ளது. மேலும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.

அ.தி.மு.க-வின் கொங்கு மண்டலத்தை அசைக்கவே முடியாது என கூவிக்கொண்டு வந்தவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.க உடன்பிறப்புகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories