தமிழ்நாடு

வேலைசெய்த இடத்தில் ரூ.85 லட்சம் திருடி 5 ஸ்டார் ஹோட்டலில் ராஜவாழ்க்கை: போலிஸ் வலைவீசிப் பிடித்தது எப்படி?

கோவை தனியார் மருத்துவமனையில் கேஷியராக வேலை செய்து ரூ.85 லட்சம் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலைசெய்த இடத்தில் ரூ.85 லட்சம் திருடி 5 ஸ்டார் ஹோட்டலில் ராஜவாழ்க்கை: போலிஸ் வலைவீசிப் பிடித்தது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேஷியராக வேலை செய்து ரூ.85 லட்சம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில், நாமக்கல் மாவட்டம் கோசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (29) என்பவர் கடந்த 6 மாதங்களாக காசாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்., 13-ஆம் தேதி மருத்துவமனையின் 3 நாட்கள் வருமானமான ரூபாய் 85 லட்சத்தை லாக்கரிலிருந்து திருடி விட்டு, யுவராஜ் தலைமறைவானார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் துணைத் தலைவர் நாராயணன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், பீளமேடு காவல்துறையினர் தலைமறைவான யுவராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த யுவராஜை சென்னை போலிஸாரின் உதவியுடன் கோவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.72 லட்சத்து 40 ஆயிரத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் திருடிய ரூபாய் 85 லட்சம் மூலம் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி வந்ததும், வாடகைக்கு கார், வீடு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கியதன் மூலம் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடிய பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ முயன்றுள்ளார் யுவராஜ். முன்னதாக, கோவை, திருச்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பணியாற்றியபோதும் லட்சக்கணக்கில் பணம் திருடி உள்ளார் யுவராஜ். அதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories