தமிழ்நாடு

இந்த ஆண்டு நடக்கப்போகும் TNPSC குரூப் 2 தேர்வு எழுதுகிறீர்களா? : முக்கியமான 5 தகவல்கள் இதோ..!

குரூப்-2 தேர்வுக்கு வரும் 23-ஆம் தேதி முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடக்கப்போகும் TNPSC குரூப் 2 தேர்வு எழுதுகிறீர்களா? : முக்கியமான 5 தகவல்கள் இதோ..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2022-ஆம் ஆண்டிற்கான குரூப்- 2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக TNPSC தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “குரூப்-2, குரூப்-2ஏ பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பாணை வரும் 23ஆம் தேதி வெளியாகிறது.

TNPSC இணையதளத்தில் இதற்கான அறிவிப்பாணை வெளியாகும். குரூப்-2 நிலையில் 116 பணியிடங்களுக்கும், குரூப் 2- ஏ நிலையில் 5413 பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறும்.

தேர்வெழுத விருப்பமுள்ளோர் பி., 23 முதல் மார்ச் 23ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வரும் மே 21ல் குரூப்- 2, குரூப் 2- ஏ போட்டித்தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபெறவுள்ளது.

மொத்தம் 5,417 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். டிசம்பர், ஜனவரியில் கலந்தாய்வு நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

TNPSC தேர்வுகள் இதுவரை காலை 10 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இனி காலையில் 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100% தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, அனைத்துவித போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வாக நடத்தப்படும் என்று அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி குரூப்- 2 தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் என்றும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ்மொழி தகுதித் தேர்வாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக் கேள்விகளுடன் பொது அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கும், நுண்ணறிவு தொடர்பாக 25 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான தகவல்கள்:

காலி பணியிடங்கள்: 5413 + 116

விண்ணப்பிக்க : பிப்., 23 முதல் மார்ச் 23 வரை

தேர்வு தேதி : மே 21

தேர்வு முடிவுகள் : ஜூன்

கலந்தாய்வு: டிசம்பர் 2022 - ஜனவரி 2023

banner

Related Stories

Related Stories