தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த தங்கை.. கார் ஏற்றி கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

சொந்த தங்கையை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற அண்ணனுக்குப் புதுக்கோட்டை நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காதல் திருமணம் செய்த தங்கை.. கார் ஏற்றி கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது சித்தியின் மகள் திவ்யா. தங்கையான இவர் நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு தனது கணவருடன் திவ்யா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முரளி மற்றும் அவரது தந்தை பெருமாள் ஆகியோர் அவர்களை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றனர்.

இதையடுத்து போலிஸார் முரளி மற்றும் பெருமாளைக் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெருமாள் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி அப்துல்காதர், முரளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories