தமிழ்நாடு

“மாம்பழம் ஜெயிக்காது.. உதயசூரியன் சின்னம் கொடுங்க” : தோல்வி உறுதியானதால் சரண்டரான பா.ம.க வேட்பாளர்! #CCTV

பொய்யான தகவலைப் பரப்பி மக்களிடையே தி.மு.க மீதிருக்கும் நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கத்தில் ராமதாஸ் உள்ளிட்டோர் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

“மாம்பழம் ஜெயிக்காது.. உதயசூரியன் சின்னம் கொடுங்க” : தோல்வி உறுதியானதால் சரண்டரான பா.ம.க வேட்பாளர்! #CCTV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சி 24வது வார்டில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் பரசுராமன், பா.ம.க சார்பாக போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதை உணர்ந்து, தி.மு.க பொறுப்பாளர்களை நேரில் சந்தித்தார்.

ஆனால், அரசியல் உள்நோக்கம் காரணமாக பா.ம.கவினர், அவரை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என மிரட்டியதாக பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வேலூர் மாநகராட்சி 24வது வார்டில், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி.பரசுராமனை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.'' எனத் தெரிவித்தார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மரியாதைக்குரிய பா.ம.க நிறுவனர் அய்யா மருத்துவர் ராமதாஸ் அவர்களே வேலூர் மாநகராட்சி 24 வார்டு பா.ம.க வேட்பாளர் பரசுராமன் அவர்களை யாரும் மிரட்டவுமில்லை, கடத்தவுமில்லை, மாறாக அந்த 24 வார்டில் அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்து எங்களுக்கு சால்வை அணிவித்து தி.மு.கவில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது ஆகவே தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொணாடார்.

அது தி.மு.க நிர்வாகிக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்ட காரணத்தை அவரிடம் கூறிவிட்டோம், இதற்கான ஆதாரமும் இருக்கிறது. அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்த உண்மையை நன்கு விசாரிக்காமல் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல காரணம், பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலையில் தி.மு.க எப்போதும் இருந்ததில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி எனக்கும் எங்கள் கட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் அவபெயரை உருவாக்க முயற்சிக்கும் உங்கள் நோக்கம் நிறைவேறாது மக்கள் அனைத்தையும். கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் வரும் தேர்தலில் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.” என்றும் குறிப்பிட்டு சிசிடிவி காட்சி ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.

பா.ம.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரசுராமன் தானே வந்து தி.மு.க நிர்வாகிகளைச் சந்தித்து சால்வை அணிவித்துப் பேசிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதன் மூலம், தோல்வி உறுதி எனத் தெரிந்து பா.ம.க வேட்பாளர் தி.மு.க நிர்வாகிகளை சந்தித்த நிலையில், அதை வைத்து பொய்யான தகவலைப் பரப்பி மக்களிடையே தி.மு.க மீதிருக்கும் நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கத்தில் ராமதாஸ் உள்ளிட்டோர் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories