தமிழ்நாடு

சென்னை ரவுடிகளின் வெப்பன் சப்ளையர்.. ஒரே இடத்தில் 9 ரவுடிகளை ‘தொக்காக தூக்கிய’ போலிஸ் - நடந்தது என்ன ?

திருவள்ளூர் அருகே கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறை கண்டுபிடித்து, 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் 9 ரவுடிகளை கைது செய்தனர்.

சென்னை ரவுடிகளின் வெப்பன் சப்ளையர்.. ஒரே இடத்தில் 9 ரவுடிகளை ‘தொக்காக தூக்கிய’ போலிஸ் - நடந்தது என்ன ?
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன்கள் சுரேஷ் குமார் (33). சுரேஷ் குமார் மற்றும் அவரது நண்பரான சங்கர் (34) என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை மணலியை சேர்ந்த இவர்களது நண்பரான அரி என்பவர் குறைந்த விலையில் மோட்டார் சைக்கிள் கிடைப்பதாகவும் அதற்காக 20,000 கொண்டு வருமாறு‌ தெரிவித்துள்ளார்.  

அதனையடுத்து சுரேஷ் குமார் மற்றும்‌ சங்கர் ஆகிய இருவரையும் கோயம்புத்தூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டைக்கு வர வழைத்து, அரி அவனது நண்பர் மூலம் இரண்டு பேரையும் கன்லூர் சுடுகாட்டுக்கு அருகே உள்ள தைலம் தோப்புக்கு அழைத்து சென்று சுரேஷ் குமாரையும் சங்கரையும் பலமாக தாக்கி, பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி சங்கரது ஏ.டி.எம் கார்டினை பறித்து  அதிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆரணியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் எடுத்துள்ளனர்.

மீண்டும் சங்கரை தாக்கி அங்கிருந்து அவர்களை கடத்திச் சென்று சங்கரின் தகப்பனார் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரை தொடர்பு கொண்டு தலா ஐந்தாயிரம் வீதம் அரி என்பவரின் கூட்டாளியான ராஜா என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு கூகுள் பே மூலம் அனுப்ப செய்து 25 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கவரைப்பேட்டை மெயின் ரோட்டில் விட்டு விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து நேற்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு சுரேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.  இதனையடுத்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பழைய குற்றவாளிகள் சரித்திர பதிவேட்டில் உள்ள புகைப்படங்களை காட்டிய போது அதில், கன்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடியான மோகன் சந்த் மற்றும் சரன் என்கிற விக்கி இருவரும் தங்களை தாக்கியவர்களில் இவர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அடையாளம் காட்ட கன்லூர் கிராமத்திற்கு சென்று மோகன் சந்த் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கவரப்பேட்டை சத்தியவேடு சாலையில் அமைந்துள்ள பாழடைந்த கட்டடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த 10 பேர் போலிஸாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். 

இதில் மூன்று பேர் தப்பி ஓடி விட மீதி 7 பேரை மடக்கி பிடித்த போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்குமார் மற்றும் சங்கரிடம் இருந்து பணம் பறிக்கும் தாக்கிய போது இவர்களும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் பதுங்கி இருந்த குடோனில் கத்தி அரிவாள் ஆகியவற்றை தயாரிக்கும் இரும்பு பட்டறையாக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. 

மேலும் அந்த பட்டறையில் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்த சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ரவுடிகளுக்கு குற்றம் புரிவதற்கு தேவைப்படும் கத்திகளை தயார் செய்து வைத்திருந்த 7 பட்டாக்கத்திகள், ஒரு டம்மி துப்பாக்கி ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு வெல்டிங் மிஷின் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.  

இதே குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மோகன் சந்த் வயது (28), சரன் (23),‌ தங்கராஜ்(26), சங்கர் (22) மணி (22) போண்டாமணி வயது (28), ஸ்ரீராம் வயது 24 தளபதி வயது 29 மணிகண்டன் வயது 23 ஆகிய ஒன்பது பேரையும் போலிஸார் கைது செய்தனர்.   மேலும் அங்கிருந்து தப்பி ஓடி சென்ற அருண்ராஜ் ராஜா ஹரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணான 6379904848 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததையடுத்து பயங்கர ஆயுதங்கள் தயார் செய்யும் பட்டறையை கண்டுபிடித்ததற்காக 9 ரவுடிகளின் கைதுசெய்து அவர்களிடமிருந்து கத்தி பொம்மை துப்பாக்கியை கைபற்றிய தனிப்படை நிறை திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் பாராட்டினார்.

banner

Related Stories

Related Stories