தமிழ்நாடு

"திராவிட மாடலை பின்பற்றுவதே இந்திய வளர்ச்சிக்கு சரியாக இருக்கும்": மக்களவையில் ஒலித்த திமுக MP குரல்!

இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் திராவிட மாடலை பின்பற்றினால் சரியாக இருக்கும் என மக்களவையில் திமுக எம்.பி, செந்தில்குமார் பேசியுள்ளார்.

"திராவிட மாடலை பின்பற்றுவதே இந்திய வளர்ச்சிக்கு சரியாக இருக்கும்": மக்களவையில் ஒலித்த திமுக MP குரல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

குடியரசுத் தலைவர் உரையில்'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற திருக்குறள் சொல்லப்பட்டிருக்கிறது திருக்குறளின் அர்த்தம் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அதனை கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது. தற்போதைய அரசாங்கத்தின்செயல்பாடுகள் நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய லட்சியங்களை கடைபிடிக்கின்றனவா

மேலும் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளபடி எனது லட்சியம் சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் அடிப்படையாக கொண்ட சமூகம் ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் அல்ல அது அடிப்படையில் சக மனிதனிடம் மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையை உருவாக்குவதாகும் ஜி.எஸ்.டி. வரி வசூலில் ஜி.எஸ்.டி. இழப்பீடுகளை மாநிலங்களுக்கு இன்னும்பல மாதங்களாக நிலுவையில் உள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய நிதி ஆண்டு உட்பட தமிழ்நாட்டிற்கு 16 ஆயிரத்து 725 கோடி ஜி.எஸ்.டி. நிலுவையில் உள்ளது. அதை எப்போது வழங்க போகிறீர்கள். குடியரசுத் தலைவர் உரையில் கோக்ளியர் உள்ளமைப்பு அறுவை சிகிச்சை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இந்த அறுவை சிகிச்சையை மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக தொலை நோக்கு பார்வை கொண்ட முதல்வர் கலைஞர் அவர்களால் நிதியால் 2010ஆம்ஆண்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நபர்கள் பயன்பெற்றுள்ளனர். தி.மு.க.வின் சமூக பொருளாதார தளத்தில் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

குடியரசு தலைவர் உரையில் தமிழகத்தைசேர்ந்த வ.ஊ.சிதம்பரம் அவர்களைப் பற்றிய குறிப்பு காணப்பட்டது. ஆனால் குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் மாநிலத்தில் அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பதிலாக அணில் மனித தலையுடன் கூடிய மாட்டின் உடல் காவி உடை அணிந்த மனிதர்கள் ஆகிய வற்றைத்தான் அணிவகுப்பில் அலங்கார ஊர்தி அனு மதிக்கப்பட்டது இவை பார்போற்றும் தமிழர் களின் பெருமையை புண்படுத்தியது. பெருமையை நிலைநாட்ட எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அலங்கார ஊர்த் தியை மாநில அணிவகுப் பில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் அந்த அலங்காரஊர்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டது. இவற்றைமக்கள் பெருமிதத்தோடு வரவேற்றனர் ஐந்து நிமிடநிகழ்வை ஒரு மாத நிகழ்வாக நீங்கள் மாற்றுவீர்கள்.

அரசியல் சாயத்துடன் முக்கியதூண்களில் ஒன்று நீதித்துறை ஆனால் சமீபத்திய காலங்களில் சில இடங்களில் சில நீதிபதிகள் அரசியல் சாயத்துடன் செயல்படுகின்றனர். சிலவருடங்களுக்கு முன்புஇரண்டு நீதிபதிகள் சாதி சார்ந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர் ஒரு குறிப்பிட்ட நீதிபதி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஜாமீன் வழக்குகள். வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு அணுகுகிறது.

நீதிபதிகள் சட்டம்மேற்கோள்கள் மற்றும் அரசிய லமைப்பின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கு வார்கள் மாறாக நீதிபதிகள் இந்தி படங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களில் குறிப்புகளை மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்குகிறார்கள். இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் நீதிமன்றம் மட்டும் நூலகங்கள் மற்றும் தீர்ப்புகளை தேடிச்சென்று சட்டம் படிக்கும் பொழுது ஆனால் மாணவர்கள் திரையரங்கில் மற்றும் ஒ.டி.டி தலங்களுக்குச் சென்று சட்டம் கற்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் விரும்புகிறதா.

தேசிய கல்விக் கொள்கையில் இந்த அரசாங்கத்தின் முக்கிய இலக்கில் ஒன்று உயர்கல்வியில் 2035 ஆம் ஆண்டு மொத்த பதிவு விகிதத்தை 50 சதவீதம் உயர்த்துவது. ஆனால் தமிழ்நாடு தற்போது 50 சதவீதத்தை எட்டியுள்ளது ஆனால் தேசிய சராசரி வெறும் 24.6 சதவீதம் தான் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பல அமெரிக்க மாகாணங்களை விட தமிழகம் மொத்த பதிவு விகிதத்தில் முன்னேறி உள்ளது.

இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் சமூக பொருளாதார தளங்களில் வெற்றியைக் கண்ட திராவிட மாடலை பின்பற்றினால் சரியாக இருக்கும் அதை விட்டுவிட்டு 20 வருடம் முன்னே செல்லும் ஒரு மாநிலத்தின் மீது இந்த மாதிரியான கல்விக் கொள்கையை திணிப்பது உங்களுக்கு வேண்டுமென்றால் பிராந்தியத்தில் செயல்படுத்திக் கொள்ளுங்கள்.

எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிப்படையில் இணக்க மானவர் அவர் வார்த்தைகளை குறைத்துக்கொண்டு செயலில் அதிகம் ஈடுபடுவார். அவர் தலைமையில் அரசியல் சட்ட போராட்டம் செய்து மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய கோட்டாவை பெற்றுத் தந்தார். சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

சமீபத்திய நிகழ்வான ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் விதிமுறைகள் திருத்தம் கொண்டு வந்தது. ஐ.ஏ.எஸ்.அலுவலர்களை விருப்பம் மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசு பணிக்கு அலுவலர்களை மாற்றுவதுஉள்ளிட்ட அம்சங்கள்இடம் பெற்றதற்கு தெரிகிறது. இவற்றை எங்கள்மாநில சுயாட்சி அடிப்படையில் எதிர்க்கிறோம்.எங்கள் முதல்வர் தமிழகத்தை இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் ஒப்பிட்டுபோட்டி போடாமல் உலகநாடுகளிடம் ஒப்பிட்டு தமிழகத்தை அனைத்துதளங்களிலும் முன்னேற்றவேண்டும் என்று திட்டமிடுகிறார்.

இவ்வாறு டாக்டர் செந்தில் குமார் பேசினார்.

banner

Related Stories

Related Stories