தமிழ்நாடு

”இனி ரேசன் கடைகளில் இதுவும் கிடைக்கும்” - விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க அரசு அசத்தல் நடவடிக்கை!

நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

”இனி ரேசன் கடைகளில் இதுவும் கிடைக்கும்” - விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க அரசு அசத்தல் நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்களை சோதனை அடிப்படையில் விற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

”கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எட்டப்பட்டுள்ளது.

சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறு தானியங்களின் தயாரிப்பை அதிகப்படுத்த, விலை நிர்ணயம் செய்ய மாநில அளவில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் அறிவிப்பின் அடிப்படையில் நியாய விலை கடைகளில் சிறு தானியங்கள் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. சோதனை முறையாக சென்னை மற்றும் கோவையில் உள்ள நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் முதலில் விற்கப்பட இருக்கிறது.

banner

Related Stories

Related Stories