தமிழ்நாடு

ஆழ்கடலில் வலை போட்டவருக்கு அதிர்ச்சி கொடுத்த மீன் : 2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய வியாபாரிகள்!

கடலில் பிடிபட்ட உடும்பு சுறா ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைபோனதால் மீனவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஆழ்கடலில் வலை போட்டவருக்கு அதிர்ச்சி கொடுத்த மீன் : 2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய வியாபாரிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் மெல்பின். மீனவரான இவர் சக மீனவர்களுடன் படகில் இன்று காலை குளைச்சல் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றார்.

பின்னர், நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வலையில் 2 டன் எடைகொண்ட உரிய வகை உடும்பு சுறா சிக்கியது. இதையடுத்து மீனவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மீனை படகில் ஏற்ற முயன்றனர்.

ஆனால், பெரிய சுறா என்பதால் மீனைப் படகில் ஏற்ற முடியவில்லை. இதையடுத்து வலையோடு சேர்த்து மனை கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் மீனைத் தரைப்பகுதிக்குக் கொண்டுவந்தனர்.

இவ்வளவு பெரிய மீனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். மேலும் அந்த மீனுடன் சேர்ந்து பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து 2 டன் எடைகொண்ட சுறா மீன் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைபோனது. இதனால் மீனவர் மெல்பின் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories