தமிழ்நாடு

முதலமைச்சர் தொடங்கி வைத்த ஆளில்லா ட்ரோன்களின் செயல்பாடு மற்றும் பயன் என்னென்ன தெரியுமா? விவரம் இதோ!

10 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த ஆளில்லா ட்ரோன்களின் செயல்பாடு மற்றும் பயன் என்னென்ன தெரியுமா? விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் என்னென்ன? இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்பட்டு வந்த ட்ரோன்கள் தற்போது பொதுமக்களின் இன்றியமையாத சேவையாகவும் மாறியுள்ளது. ஒருபுறம் மக்களின் பயன்பாடு மற்றொரு புறம் இளம் பொறியாளர்கள் உள் நாட்டிலேயே சர்வதேச தரத்திற்கு ட்ரோன்களை தயாரித்து வரும் நிலையில், 10 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பெட்ரோலை எரிபொருளாகக் கொண்டு அதிக திறன் வாய்ந்த "ஹெலிபோன் ட்ரோன்" கண்காணிப்பு பணிக்கும், வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது தேடல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காட்டுத்தீ போன்ற சம்பவங்கள் உருவாகும்போது கண்காணித்து தகவல் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட "Swarm ட்ரோன்கள்" என மொத்தம் 7 வகையான ட்ரோன்களின் செயல்பாடு குறித்து முதலமைச்சரின் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

ட்ரோன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று விதைகளை தூவ கூடிய ட்ரோன், ஒலிபெருக்கியுடன் கூடிய ஆளில்லா ட்ரோன்கள் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நிகழும் போது உடனடியாக பொது அறிவிப்பை மக்களுக்கு தெரியப்படுத்தவும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் ட்ரோன்கள் வெகுவாக உதவுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தின் மூலம் ட்ரோன் பயன்பாட்டை அதிகப்படுத்தி வெகுஜன மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பொறியியல் மாணவர்களின் ஆராய்ச்சியையும், புதிய வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என தலைமை ட்ரோன் பயிற்சியாளர் வசந்த்ராஜ் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories