தமிழ்நாடு

11 கொலை உள்ளிட்ட 63 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது.. ஹரியானாவில் சுத்துப்போட்ட தமிழக போலிஸார்!

11 கொலைகள், 15 கொலை முயற்சி உள்ளிட்ட 63 வழக்குகளில் தொடர்புடைய பொய்யாகுளம் தியாகு தமிழக காவல்துறையினரால் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 கொலை உள்ளிட்ட 63 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது.. ஹரியானாவில் சுத்துப்போட்ட தமிழக போலிஸார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 கொலைகள், 15 கொலை முயற்சி உள்ளிட்ட 63 வழக்குகளில் தொடர்புடைய பொய்யாகுளம் தியாகு என்பவர் காஞ்சிபுரம் சிறப்பு தனிப்படை காவல்துறையினரால் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக விளங்கிய மறைந்த ஸ்ரீதரிடம் இருந்த தனிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் தினேஷுக்கு ஆதரவாக பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகு என்பவர் செயல்பட்டு வந்தார்.

இந்த பொய்யாகுளம் தியாகு எமீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 கொலைகள், 15 கொலை முயற்சிகள் உட்பட 63 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் தியாகு தனது மனைவி சுதாவுடன் தலைமறைவாகி இருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் நோக்கில் காவல்துறை தலைவர் அறிவுறுத்தலின் பேரில் டி.ஐ.ஜி சத்யபிரியா ஆலோசனையின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே பொதுமக்கள் அச்சுறுத்தும் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளி தியாகுவை பிடிக்க 15 பேர் கொண்ட சிறப்புப்படை கடந்த 10 நாட்களாக டெல்லி பகுதியில் தங்கியிருந்து அவரை நோட்டமிட்டு வந்தது.

இந்நிலையில் டெல்லி - ஹரியானா இடையில் உள்ள பரிதாபாத் பகுதியில் தனிப்படை போலிஸார் தியாகுவை கைது செய்தனர். தியாகு சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories