தமிழ்நாடு

“15 ஆண்டுகளாக நடக்க முடியாத சோகம்.. மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த திருத்துறைப்பூண்டி SP” : நடந்தது என்ன?

திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளிக்கு போலிஸ் ஒருவர் உதவிய சம்பவம் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“15 ஆண்டுகளாக நடக்க முடியாத சோகம்.. மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த திருத்துறைப்பூண்டி SP” : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவாளூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். விவசாயக் கூலித் தொழிலாளியான தியாகராஜனுக்கு ஹரிஹரன் என்ற மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் உள்ளார்.

15 வயதாகும் ஹரிகரனுக்கு மூன்று சக்கர வாகனம் வாங்க முடியாத சூழல் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ரோந்துப் பணிக்குச் சென்றுள்ளார்.

அப்போது ஹரிஹரனின் நிலை காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திற்கு தெரியவந்துள்ளது. இதனிடையே அவருக்கு உதவ முன்வந்து மூன்று சக்கர கைக்கிள் ஒன்றை வாங்கிக்கொடுக்க முன் வந்துள்ளார். இதனையறிந்த கொடையுள்ளம் கொண்ட சிலர் அவருக்கு உதவி செய்யதுள்ளனர்.

இதனிடையே சிறுவன் ஹரிஹரனுக்கு பொங்கல் பரிசாக மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளனர். தனது சொந்த ஊரியில் பல இடங்களில் நேரில் பார்த்திடாத ஹரிகரன், அப்பகுதில் சைக்கிளில் உலா வந்தார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

மேலும் மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுத்த காவல்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திற்கு, ஹரிஹரன் மற்றும் தாய்-தந்தை தங்களின் நன்றியைத் தெரிவித்தனர். மேலும் காவலரின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories