தமிழ்நாடு

சட்டைக்குள் வைத்து மறைத்து ஹவாலா பணம் கடத்தல்? சென்னையில் ஃப்ளைட்டில் ஏறுவதற்கு முன்பு சிக்கிய பயணிகள்!

துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.55.27 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து, கடத்தல் பயணிகள் 3 பேரை கைது செய்து விசாரணை.

சட்டைக்குள் வைத்து மறைத்து ஹவாலா பணம் கடத்தல்? சென்னையில் ஃப்ளைட்டில் ஏறுவதற்கு முன்பு சிக்கிய பயணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையிலிருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் காலை 9.45 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினா் கண்காணித்து பரிசோதித்து அனுப்பினா்.

அப்போது சென்னையை சோ்ந்த 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப்பின்பு முரணாக பேசியதையடுத்து 3 பேரின் உடமைகளை சோதனையிட்டனா்.

சட்டைக்குள் வைத்து மறைத்து ஹவாலா பணம் கடத்தல்? சென்னையில் ஃப்ளைட்டில் ஏறுவதற்கு முன்பு சிக்கிய பயணிகள்!

அவா்களுடையை டிராலி சூட்கேஸ் மற்றும் பைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா் கரண்சி, ஐக்கிய அரபு தினாா், குவைத், பக்ரைன் தினாா், ஓமன் ரியால் போன்ற வெளிநாட்டு பணம் கட்டுகட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறையினா் கண்டுப்பிடித்தனா்.

3 பயணிகளிடமிருந்து இந்திய மதிப்பிற்கு ரூ.55.29 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா். அதோடு 3 பயணிகளின் துபாய் பயணத்தை ரத்து செய்ததோடு அவா்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினா்.

அவா்களிடமிருந்தது, கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்றும், இவா்கள் 3 பேரும் கடத்தல் குருவிகள் என்றும் தெரிந்தது. எனவே இவா்களிடம் இந்த ஹவாலா பணத்தை கொடுத்து அனுப்பிய முக்கிய புள்ளி யாா்? என்று தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

banner

Related Stories

Related Stories