தமிழ்நாடு

கோவை விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த அரசியல் கட்சி பிரமுகரால் பரபரப்பு!

கோவை விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

கோவை விமான நிலையத்திற்கு  துப்பாக்கியுடன் வந்த அரசியல் கட்சி பிரமுகரால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் KSPA தங்கல். இவர், பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் சேர்மனாகவும், தற்போதைய கேரள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில், தங்கல் கோவையிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதற்காக இவர் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

அதற்காக கோவை விமான நிலையம் வந்த அவரை மத்திய பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த 7 ரவுண்டு புல்லட் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கலிடம் துப்பாக்கியுடன் வந்ததற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories