தமிழ்நாடு

பீரோவை உடைத்து திருடிக் கொண்டிருக்கும் போதே வசமாக சிக்கிய வாலிபர் - பீதியில் அரும்பாக்கம் மக்கள்!

வீட்டின் பூட்டை உடைத்து திருடி கொண்டிருந்த கொள்ளையனை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பீரோவை உடைத்து திருடிக் கொண்டிருக்கும் போதே வசமாக சிக்கிய வாலிபர் - பீதியில் அரும்பாக்கம் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (36). இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கமாக தனது மனைவி ஜவர்ணா (34). இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று உள்ளனர்.

வியாபாரம் முடித்து விட்டு இரவு வீட்டுக்கு திரும்பும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு ஜவர்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பீரோ லாக்கரை இரும்பு ராடால் உடைத்துக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார்.

பீரோவை உடைத்து திருடிக் கொண்டிருக்கும் போதே வசமாக சிக்கிய வாலிபர் - பீதியில் அரும்பாக்கம் மக்கள்!

உடனடியாக அப்பகுதி மக்கள் ஓடி வந்து வீட்டுக்குள் இருந்த வாலிபரை பிடித்து சரமாரியாகத் தாக்கி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பிறகு போலிஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஷேக் ராகுல் (21) என்பதும் ஏற்கனவே இவர் மீது மதுரவாயல் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 7 கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் இவரிடமிருந்து இரும்பு ராடு, சுத்தி, கத்தி உட்பட பொருட்களை பறிமுதல் செய்த போலிஸார் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories