தமிழ்நாடு

“வேலைக்கு வராத ஆத்திரத்தில் தகராறு.. பெயிண்டர் வெட்டிக் கொலை” : 6 பேரை கைது செய்து போலிஸ் தீவிர விசாரணை!

திருப்பெரும்புதூர் சோமங்கலம் அருகே பெயிண்டர் கொலை தொடர்பாக குற்றவாளிகள் 6 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“வேலைக்கு வராத ஆத்திரத்தில் தகராறு.. பெயிண்டர் வெட்டிக் கொலை” : 6 பேரை கைது செய்து போலிஸ் தீவிர விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கர் ( எ ) வெள்ளை (29). இவர் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அன்று இரவு சங்கர் என்பவர் பழையநல்லூர் பஸ்நிறுத்தம் பின்புறம் உள்ள இடத்தில் தலையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டு சடலமாக கிடந்தார்.

இது தொடர்பாக சோமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கு சம்மந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் அன்பு என்பவர் வெள்ளையிடம் பெயிண்டராக வேலை செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று வெள்ளை அன்புவை பணிக்கு அழைத்துள்ளார். அதற்கு அன்பு மதுபோதையில் பணிக்கு வரமாட்டேன் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்பு அன்பு அவரது நண்பர்களான நாகராஜ், ராஜேஷ், சதீஷ், வெங்கடேசன், யுவராஜ் ஆகியோர் சேர்ந்து சங்கர் ( எ ) வெள்ளையை தலையில் வெட்டி சங்கரை கொலை செய்துள்ளது தெரியவந்ததையடுத்து, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் விரைவாக எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

banner

Related Stories

Related Stories