தமிழ்நாடு

“திராவிடத்தின் சரியான வாரிசு என்பதை மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார்” : முதல்வருக்கு குவியும் பாராட்டு!

ஒவ்வொரு செயலின் மூலமும் - தாம், திராவிடத்தின் சரியான வாரிசு என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்” என்று முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

“திராவிடத்தின் சரியான வாரிசு என்பதை மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார்” : முதல்வருக்கு குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடர் நடவடிக்கைகள் - சாதனைகளைப் பட்டியலிட்டு கண்கவர் செய்தித் தொகுப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

“ஒவ்வொரு செயலின் மூலமும் - தாம், திராவிடத்தின் சரியான வாரிசு என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்” என்று அதில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிமிடங்கள் 19 விநாடிகள் மட்டுமே ஓடக் கூடிய அந்த வீடியோவில் - பின்னணியில், `கணீர்’ குரலில் எடுத்துரைக்கப்படும் - முதல்வர் அவர்களின் சிறப்புகள் வருமாறு:-

பாதுகாப்புத் துறைகளில், அதிலும் குறிப்பாக ராணுவத்தில் இந்தியின் ஆதிக்கம் மிகவும் அதிகம். அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பிரஸ் மீட் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார் ராணுவ துணைத் தளபதி.

பொதுவாக, மொழிசார்ந்த விசயங்களுக்கு ராணுவம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. பிரஸ் மீட்டில், “நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்கிறார் ராணுவத் தளபதி.

பொதுவாக, ராணுவம் ‘தமிழ்நாடு முதல்வர், கேரள முதல்வர்’ என்றுதான் அழைக்கும். “நமது முதல்வர்” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம், இந்திய ராணுவத்தின் நெருக்கமான ஒரு தலைவராக மு.க.ஸ்டாலின் பார்க்கப்படுகிறார் என்பதே பொருள்.

தமிழ்நாடு முதல்வருக்கு மட்டும் அல்லாமல், கிராம மக்கள், காவல்துறை, பத்திரிகைத் துறை, மாவட்ட நிர்வாகம், பொது மக்கள் போன்ற அனைவருக்கும் நன்றி சொல்லியிருக்கிறார் ராணுவத் தளபதி... இது புதிது.

இப்படிப்பட்ட துயரமான மற்றும் சவாலான நேரத்தில், திறம்படச் சமாளித்து, எந்தவிதக் குறையும் இல்லாமல், நிர்வகித்து சாதித்து இருக்கிறார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். நியாயமாக, டெல்லி தனது தலைமை அமைச்சரை வைத்துச் செய்ய வேண்டிய வேலையை, தமிழ்நாட்டு முதல்வர் தனியாகச் செய்திருக்கிறார். Yes, Stalin is more dangerous than Karunanidhi.

1960-களில் அந்நியப் படையெடுப்பின் போது, இந்திய நாட்டுக்கு உறுதுணையாக இருந்தது அண்ணா தலைமையில் இருந்த தி.மு.க. லெஃப்டினன்ட் ஜெனரல் அ.அருண் உறுதுணையாக இருந்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. நாட்டிலேயே அதிமாக நிதி, பொருளுதவி செய்ததும், போரில் உயிரிழந்தவர்களுக்கு இலவச நிலம் கொடுத்ததும் தி.மு.க. அரசு. நெருக்கடிகளில் திறம்படச் செயல்படும் திறமை தளபதி மு.க.ஸ்டாலினிடமும் இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

ஏனெனில், தளபதி மு.க.ஸ்டாலின்; பெரியாரின் வாரிசு, அண்ணாவின் வாரிசு, தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசு... சமூகநீதித் தொட்டிலாம் திராவிடத்தின் வாரிசு அவர்” அவ்வீடியோவில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories