தமிழ்நாடு

அசைவத்தால் ஈர்க்கப்பட்டு ரூ.3 லட்சத்தை கோட்டை விட்ட முதியவர்; மதுரை பாண்டி கோவிலில் நடந்த ருசிகர நிகழ்வு!

கோவிலுக்கு சென்றவர் அங்கு அசைவ சாப்பாடு போட்டதும் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தான் கொண்டு வந்த 3 லட்சத்தை முதியவர் ஒருவர் தொலைத்திருக்கிறார்.

அசைவத்தால் ஈர்க்கப்பட்டு ரூ.3 லட்சத்தை கோட்டை விட்ட முதியவர்; மதுரை பாண்டி கோவிலில் நடந்த ருசிகர நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநர் அழகிரி சாமி (62). இவர், அண்மையில் மதுரையில் உள்ள பாண்டி கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.

அசைவப் பிரியரான இவர் அங்குள்ள மண்டபத்தில் நடந்த காதுகுத்து விழாவில் சாப்பிட்டு விட்டுச் சென்றிருக்கிறார். கிளம்பும்போது தான் கொண்டு வந்த ரூ.2.93 லட்ச பணப்பையை மண்டபத்திலேயே மறந்து வைத்துவிட்டு விருதுநகருக்குச் சென்றிருக்கிறார்.

இதனையடுத்து ஞாபக மறதியில் மண்டபத்திலேயே பணப்பையை வைத்ததை நினைவுபடுத்திய அழகிரி சாமி உடனே பாண்டி கோவிலுக்கு விரைந்திருக்கிறார். அப்போது அங்கு மண்டபத்தில் எவருமே இல்லாததால் மாட்டுத்தாவணி காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் மீது தனிப்படை அமைத்து தனிப்படை அமைப்பு விசாரணையை முடுக்கிவிட்டனர். அதன்படி மண்டபத்தில் நடந்தது திண்டுக்கல்லை அடுத்த சோழவந்தனைச் சேர்ந்த கோவை போலிஸ் ஏட்டு பாண்டியராஜனின் இல்ல காதுகுத்து விழா எனத் தெரியவந்தது.

இதனையடுத்து திண்டுக்கல்லுக்கு விரைந்த தனிப்படை அங்கிருந்த பாண்டியராஜனிடம் இது குறித்து விசாரித்திருக்கின்றனர். அதற்கு, மண்டபத்தை விட்டு புறப்படும் போது பணத்துடன் இந்த மஞ்சள் பையும் இருந்தது. அதனை போலிஸிடம் ஒப்படைத்துவிடலாம் என எண்ணி எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் போலிஸ் வந்தது நல்லது எனக் கூறி தன்னிடம் இருந்த பணப்பையை தனிப்படையினரிடம் வழங்கியுள்ளார் பாண்டியராஜன். அதனைப் பெற்று வந்த மாட்டுத்தாவணி போலிஸார் காவல் நிலையத்தில் வைத்து அழகிரி சாமியிடம் ஒப்படைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories