தமிழ்நாடு

லிஃப்ட் கொடுப்பதுபோல மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கொள்ளையன்... போலிஸில் சிக்கியது எப்படி?

லிஃப்ட் கொடுப்பதுபோல் மூதாட்டியிடம் கொள்ளையடித்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

லிஃப்ட் கொடுப்பதுபோல மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கொள்ளையன்... போலிஸில் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டம், சத்தேரி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சந்திரா. மூதாட்டியான இவர் மன்னார்குடி அருகே பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், நான் உங்களை வீட்டில் விட்டுவிடுகிறேன் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்தவுடன் தாகமாக இருக்கிறது. தண்ணீர் வேண்டும் என அந்த நபர் கேட்டுள்ளார்.

இதற்காக மூதாட்டி வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது அந்த நபர் சந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மூதாட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியிடம் கொள்ளையடித்தது பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை வீட்டில் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories